Monday, 1 January 2018

Happy New Year 2018


உலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறோம்....!!


- திருவள்ளுவர் பேரவை
(வாழ்வியல் பாரம்பரியம்)

Saturday, 30 December 2017

Voice of Valluvar



மனிதன் நாகரீகமாக மாறிவிட்டான் என்பதற்காக பிறக்கும் குழந்தைகள் ஆடையோடு பிறப்பதில்லை...

அதேபோல,

நாகரீகம் என்ற பெயரில் மனிதன் ஆடை உடுத்தினாலும், ஜாதி-மதங்களை பேசிக்கொண்டு இன்னும் நிர்வாணமாகத்தான் திரிகிறான்!

என்னதான் டிஜிட்டல் முறையில் முன்னேறினாலும், சில விஷயங்களில் மனிதன் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறான்!...


- திருவள்ளுவர் பேரவை.
(வாழ்வியல் பாரம்பரியம்)

Thursday, 9 November 2017

வள்ளுவன் என்று சொல்லடா உன் வாழ்வை உயர்த்திக் கொள்ளடா...


சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள் இப்படி தனிச்சிறப்புடன் வாழ்பவர்களை குறிப்பிட்ட சிலர் மட்டும் சொந்தம் கொண்டாடுவதை உலக மக்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை. அதிலும் திருவள்ளுவர் என்பவர் உலக மக்கள் அனைவரையும் சமமாக மதித்து தனது சிந்தனைகளை பொதுவாக வழங்கியவர். எனவேதான் தனது சிந்தனைகள் குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே திருவள்ளுவர் தன்னை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. அதனால்தான் வரலாற்று ஆய்வாளர்களும் அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

திருவள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகளையும், கொள்கைகளையும் கடைபிடித்தவர்கள், எடுத்துக் கையாண்டவர்கள் அனைவரும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே உலக மக்கள் அனைவரும் திருவள்ளுவரின் சிந்தனைகளை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் விதமாகவும், திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டை நினைவுபடுத்தி சிறப்பிக்கும் விதமாகவும் "வள்ளுவன் என்று சொல்லடா உன் வாழ்வை உயர்த்திக் கொள்ளடா..." என்று தொடங்கும் பாடலை தயாரித்து வெளியிட இருக்கிறோம்.
திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டில் கலந்துகொள்ளவும், சிறப்பில் பங்குபெறவும் தயாராகுங்கள்...
- TVR Social.

Friday, 27 October 2017

TVR Social Networks


உலகளாவிய வாழ்வியல் சிந்தனைகள் கொண்ட திருவள்ளுவர் பேரவையின் முதல் சமூக இணையதளம்! TVR Social Network. வள்ளுவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இதில் உறுப்பினராக பதிவு செய்யுங்கள். "திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டில்" ஒன்றிணையுங்கள்.

இணையதள முகவரி:

குறிப்பு:  அனைத்து தரப்பு மாணவ, மாணவிகள் / கல்வியாளர்கள் / உலக மக்கள் அனைவருக்குமான பொது இணையதளம் விரைவில் தொடங்கப்படும்!


- திருவள்ளுவர் பேரவை.
(வாழ்வியல் பாரம்பரியம்)

Sunday, 22 October 2017

வள்ளுவன் நெறியைக் காக்கும் வாழை மரங்கள்!

சுய சிந்தனையுள்ள பாரம்பரியம்.

வாசலில் வாழையை நிறுத்தி, மணப்பந்தலில் மாவிலைத் தோரணம் கட்டி, பந்தியில் பலாச்சுளையைப் பரிமாறி, முக்கனிகளின் பெருமையை முன்னிறுத்தி, வேதங்களை மந்திரங்களாக சொல்லி திருமணங்களை நடத்தியவர்கள்தான் வள்ளுவர் பாரம்பரிய மக்கள்.

வள்ளுவர்கள் ஏன் திருமண வாசலில் வாழையை நிறுத்தினார்கள் தெரியுமா? வாழை மரங்கள் ஒரு முறைதான் பூ-பூத்து தார் விடும்! அதனால்தான் வாழை பயிரிடுபவர்கள் அதிலிருந்து வாழைத்தார் வந்தவுடன் வாழை மரங்களை வெட்டி விடுவார்கள்.

வாழை மரங்கள் எப்படி மறுமுறை தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே திருமண வாழ்வில் இணையும் தம்பதிகள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியவர்கள்தான் வள்ளுவர்கள்!!

அதனால்தான் வள்ளுவர் குல ஜோதிடர்கள், மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு வாழை மரத்திற்கு தாலி கட்ட செய்து அந்த வாழை மரத்தை வெட்டிவிட்டு அதன்பிறகு திருமணம் செய்து வைத்தார்கள்!! (மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு மறுதாரம் உண்டு என்பது விதி. இதை தடுக்கவே வாழை மரத்திற்கு தாலி கட்டி விதியை மதியால் வென்றவர்கள்தான் வள்ளுவர் குல ஜோதிடர்கள்)

திருமண வீட்டு வாசலில் வாழைமரத்தை நிறுத்தி வைத்து 3000 ஆண்டுகளுக்கு முன்பே எயிட்ஸ் விளம்பரத்தை நாகரீகமாக செய்த பாரம்பரியம்தான் வள்ளுவர் பிறந்த தமிழர் பாரம்பரியம்!


- திருவள்ளுவர் பேரவை
(வாழ்வியல் பாரம்பரியம்)

Thursday, 19 October 2017

Voice of Valluvar



தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்கத் தெரிந்ததால் மற்றவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தலைவனாக முயற்சிப்பதால் நாம் தடுமாறுகிறோம். என்ன செய்வது?... எல்லோருக்குமே தலைவனாகத்தான் ஆசை!!

- திருவள்ளுவர் பேரவை
(வாழ்வியல் பாரம்பரியம்)

Tuesday, 10 October 2017

திருவள்ளுவர் சமூக இணையதளம் - TVR SOCIAL



திருவள்ளுவர் சமூக இணையதளம் (TVR SOCIAL)

உலகளாவிய வாழ்வியல் பாரம்பரிய பெருமையும், சுய சிந்தனையும் கொண்ட திருவள்ளுவர் சமுதாய மக்களுக்கான பிரத்தியேகமான (Social Network) சமூக இணையதளம்!

விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது...

உலகெங்கும் உள்ள திருவள்ளுவர் சமுதாய மக்கள் அனைவரும் இதில் உறுப்பினராக இணைந்து தங்களுடைய சமூக கருத்துக்கள், சிந்தனைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை பதிவு செய்து நமது பாரம்பரிய பெருமைகளை மீண்டும் உலகமறிய செய்யுங்கள்! ..

திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டிற்காக ஒன்றிணையுங்கள்!!


- திருவள்ளுவர் பேரவை
(வாழ்வியல் பாரம்பரியம்)

Wednesday, 6 September 2017

Voice of Valluvar



உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு எதையேனும் செய்ய ஆசைப்பட்டால் சிறந்த கல்வியையும், திறமையையும் கற்றுக்கொடுங்கள். ஏனென்றால்? இந்த உலகத்தில் யாராலும் ஏமாற்றி பறித்துக்கொள்ள முடியாத ஒரே சொத்து "கல்வியும் திறமையும்" மட்டுமே...
- திருவள்ளுவர் பேரவை.