Thursday, 9 November 2017

வள்ளுவன் என்று சொல்லடா உன் வாழ்வை உயர்த்திக் கொள்ளடா...


சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள் இப்படி தனிச்சிறப்புடன் வாழ்பவர்களை குறிப்பிட்ட சிலர் மட்டும் சொந்தம் கொண்டாடுவதை உலக மக்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை. அதிலும் திருவள்ளுவர் என்பவர் உலக மக்கள் அனைவரையும் சமமாக மதித்து தனது சிந்தனைகளை பொதுவாக வழங்கியவர். எனவேதான் தனது சிந்தனைகள் குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே திருவள்ளுவர் தன்னை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. அதனால்தான் வரலாற்று ஆய்வாளர்களும் அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

திருவள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகளையும், கொள்கைகளையும் கடைபிடித்தவர்கள், எடுத்துக் கையாண்டவர்கள் அனைவரும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே உலக மக்கள் அனைவரும் திருவள்ளுவரின் சிந்தனைகளை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் விதமாகவும், திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டை நினைவுபடுத்தி சிறப்பிக்கும் விதமாகவும் "வள்ளுவன் என்று சொல்லடா உன் வாழ்வை உயர்த்திக் கொள்ளடா..." என்று தொடங்கும் பாடலை தயாரித்து வெளியிட இருக்கிறோம்.
திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டில் கலந்துகொள்ளவும், சிறப்பில் பங்குபெறவும் தயாராகுங்கள்...
- TVR Social.